ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் உயர் மட்டத்திலுள்ளவர்களுக்கு எதிராக 30 நாடுகளில் வழக்குத் தொடர புலம்பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் இத்தகைய வழக்குகளைத் தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கு ஆதரவாக செல்வந்தர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை உதவுவதற்கு முன்வந்துள்ளன.
முதற்கட்டமாக இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சில நாடுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டாலும்,அவை எந்தெந்த நாடுகள் என்று உறுதியாகத் தெரியவில்லை.
இருந்தாலும், அண்மையில் ஜேர்மன், இங்கிலாந்து, நோர்வே போன்ற நாடுகளில் தமிழர்கள் குறிப்பிட்ட சில சிங்கள நபர்களுக்கு எதிராக வழக்கு போட்டதும், உலகம் முழுவதும் ஐ.நா. அறிக்கையின் பின்னர் ஒருவித மாற்றமும் நிகழ்வதால், முப்பது நாடுகளில் சிங்களவர்களுக்கு எதிராக வழக்கு போடுவது சாத்தியம்.
அதேவேளை இவர்கள் சிங்கள நாட்டுக்குள் முடக்கப்படும் பொழுது அது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர உதவும், சிங்களத்தின் மீது பொருளாதார தடைகளை விதிக்க உதவும் .
நன்றி
யாழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக