சென்னை : மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்டு 146 இடங்களை பிடித்த அதிமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா தலைமை யிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, இன்று பகல் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. விழாவுக்கு வந்த ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் மாலதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் கருத்தையா பாண்டியன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்று, விழா நடக்கும் அரங்குக்கு அழைத்துச் சென்றனர்.
சிறிது நேரத்தில் கவர்னர் பர்னாலா வந்தார். அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பர்னாலா, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பதவி ஏற்றதும் பிரமாண பத்திரத்தில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சண்முகவேலு, வைத்திலிங்கம், கருப்பசாமி, செந்தமிழன் உள்பட 33 அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ஏ.பி.பரதன், டி.ராஜா, ராஷ்டிரிய லோக்தள் கட்சி தலைவர் அஜீத்சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், எல்.கே.சுதீஷ், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ் ணன், முன்னாள் மாநில செயலாளர் வரதராஜன், பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர் மகேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா, பா.ஜ. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் நீதிபதிகள், தொழிலதிபர்கள், பாடகி பி.சுசீலா, நடிகைகள் அஞ்சலிதேவி, சவுகார்ஜானகி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் திரையுலகினர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போயஸ் கார்டனில் இருந்து விழா நடந்த சென்னை பல்கலைக்கழகம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கடற்கரை சாலை முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் குவிந்திருந்தனர். சென்னை பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தோரணங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
எல்லா நுழைவு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பார்க்க வசதியாக அரங்குக்கு வெளியே பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அங்கு மெகா சைஸ் டிஜிட்டல் டி.வி.க்களும் வைக்கப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக