தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பதையிட்டு இலங்கை அரசாங்கமோ அல்லது பெரும்பான்மைச் சிங்கள மக்களோ அதிகளவுக்கு கலவரமடைந்திருந்திருக்கவில்லை.
ஆனால், இந்த விடயத்தில் சிறுபான்மை தமிழ் மக்கள் இரு வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். காங்கிரஸ்தி.மு.க. கூட்டணி தோல்வியால் பாதிக்கப்பட்டிருப்பதை ஒரு பிரிவினர் மகிழ்ச்சியாக நோக்குகின்றனர். அதேசமயம்,அதிகார மாற்றமானது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் புதுடில்லியின் கொள்கையில் எந்தவொரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை மற்றைய தரப்பினர் கொண்டுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகளினால் விடுக்கப்படும் அறிக்கைகள் முக்கியத்துவமானவையாக அமையப்போவதில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அரசாங்கம் என்ற முறையில் இலங்கையானது டில்லியிலுள்ள இந்திய அரசாங்கத்துடனே விடயங்களைக் கையாளுவதாகவும் எந்தவொரு இந்திய மாநிலத்துடனும் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்புக்கும் டில்லிக்குமிடையிலான உறவுகள் மிகவும் சுமுக நிலையிலிருப்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
தென்னிலங்கையிலுள்ள பொதுவான அபிப்பிராயத்தையே அமைச்சரவைப் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளதாகத் தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒரேயொரு விமர்சனம் மட்டுமே காணப்பபட்டது. அதிகார மாற்றமானது இலங்கை தொடர்பான புதுடில்லியின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லையென அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டில்லிக்கு எது சிறப்பாக அமையுமென அது கருதுகின்றதோ அதனையே செய்கின்றதென்பது அடிப்படையான அம்சமாகும். தமிழ் நாடானது டில்லியிலிருந்து இந்தத் தொலைதூரத்திலுள்ள வறிய மைத்துனராகக் கருதப்படுகிறது. அதற்கு மேல் எதுவுமில்லையென த நேஷன் பத்திரிகையில் மலிந்த செனவிரட்ண என்பவர் எழுதியுள்ளார். அதிகாரத்துக்கு வந்தவுடன் ஜெயலலிதா யதார்த்தபூர்வமானவராக விளங்குவாரென்று த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் பிரபாத் சகாபந்து எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் நேச அணிகளுடன் அவர் மோதும் நிலைமை காணப்படுகிறது. மத்திய அரசிலும் பார்க்க அணிகளுடனேயே அதிகளவுக்கு மோதல் நிலைமையுள்ளதென அவர் எதிர்வுகூறியுள்ளார்.
இதேவேளை, ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையானது உற்சாகமளிப்பதாக அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனடியாகவே இலங்கைத் தமிழர் தொடர்பாக ஜெயலலிதா அறிக்கை விடுத்திருந்தார்.
யுத்தத்தினால் எண்பதாயிரம் யுத்த விதவைகளும் பல்லாயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாங்கள் உங்களின் ஆதரவை நாடுகின்றோம் என்று தமிழ்க் கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான காங்கிரஸ்தி.மு.க. கூட்டணிக் கொள்கையால் தமிழ்நாட்டு மக்கள் அடைந்த ஆத்திரமே தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக வீரகேசரி வாரப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டு தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழர்கள் வேறுபட்ட கருத்தைக் கொண்டிராதவர்களாக இருக்கக்கூடும். ஆனால், இலங்கைத் தமிழர்களின் துன்பநிலை தொடர்பாக வித்தியாசமான நிலைப்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் கொண்டிருக்கவில்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வின் தோல்வி கடவுளின் தண்டனையெனவும் யுத்தத்தை நிறுத்துவதற்கு அர்த்தபுஷ்டியுடனான நடவடிக்கை எதனையும் தி.மு.க. எடுத்திருக்கவில்லையென்றும் அப்பாவி மக்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்கவில்லையெனவும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி வர்த்தகரான சேகரம் என்பவர் கூறியுள்ளார்.
மே 13 இல் இடம்பெற்ற இந்திய பாராளுமன்றத் தேர்தலின்போது தற்போது கொடுத்திருந்த தீர்ப்பை தமிழக மக்கள் அச்சமயம் கொடுத்திருந்தால் மட்டுமே 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவுகளைத் தடுத்திருக்க முடிந்திருக்கும் என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜெயலலிதாவின் கருத்துகளையிட்டு இலங்கைத் தமிழ் மக்கள் அதிகளவுக்கு இழுபட்டுச் செல்லக்கூடாது என தினக்குரல் வலியுறுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தல்களில் இலங்கைத் தமிழ் விவகாரம் தீர்க்கமான விடயங்களிலொன்றாக அமைந்தது என்ற கருத்து தொடர்பாக அப்பத்திரிகை சந்தேகம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் விவகாரம் தான் தேர்தல் முடிவில் தீர்க்கமான காரணியாக விளங்கியது என்றால் கூட்டணியிலிருந்து இலங்கைத் தமிழர்களின் தீவிர ஆதரவாளரான வைகோ வெளியேறுவதற்கு ஜெயலலிதா இடமளித்திருக்கமாட்டாரென தினக்குரல் குறிப்பிட்டுள்ளது.
சிங்கள தரப்பிலுள்ள அறிவு ஜீவிகள் போன்றே தமிழ்த் தரப்பிலுள்ள அறிவு ஜீவிகளும் எந்த மாற்றமும் ஏற்படாதெனக் கருதுகின்றனர். தனது நலன்களுக்குப் பொருத்தமாகவிருக்கும்போது மட்டுமே தமிழ்நாடு கூறுவதை புதுடில்லி செவிமடுக்குமென்ற கருத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் காணப்படுகிறது. அத்துடன், இந்தியாவிலுள்ள தமிழர்கள் அங்குள்ள மக்கள் தொகையில் 6% மான சிறுபான்மையினர்கள் என்று உயர்பட்டதாரியான பிரேம் என்பவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக